<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener("load", function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <iframe src="http://www.blogger.com/navbar.g?targetBlogID=19055010&amp;blogName=Agent+NJ&amp;publishMode=PUBLISH_MODE_BLOGSPOT&amp;navbarType=SILVER&amp;layoutType=CLASSIC&amp;searchRoot=http%3A%2F%2Fnjcomments.blogspot.com%2Fsearch&amp;blogLocale=en_US&amp;homepageUrl=http%3A%2F%2Fnjcomments.blogspot.com%2F" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" height="30px" width="100%" id="navbar-iframe" allowtransparency="true" title="Blogger Navigation and Search"></iframe> <div></div>

Previous Posts

Archives

My Regular Blog



Links


Powered for Blogger
by Blogger templates

Agent NJ

ம்... வாழ்க்கை அப்டியே ஓடுது
இங்க கீழ இருக்குற ரெண்டு பதிவுலயும் சொல்லிருக்கற விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எதோ ஒரு வகைல இந்தக் கதை/சம்பவங்கள்-ல எனக்கு நேரடித் தொடர்பே இருக்கற மாதிரி கூடத் தோணுது.

வேரறுந்த மரங்கள்...
"இவ்ளோ தெளிவா சிந்திக்கிறீங்க...ஏன் சொந்தமா டிராவல்ஸ் வச்சுக்கக்கூடாது?"

"பண்ணணும் சார். ரெண்டு மூணு வருஷம் போகட்டும்னு
இருக்கேன். மொதல்ல நிறைய்ய கத்துக்கணும். பொறுப்பு எடுத்துக்கும்போது என்னன்ன சிக்கல் வரும்னு தெரியவேண்டாமா?"

ஒரு பெருமூச்சுடன் மேலும்,

"படிச்சிருந்தா உங்கள மாதிரி ஆபிசரா ஆகியிருந்திருக்கலாம். படிப்பு ஏறல. பாதிலயே கார் ஓட்ட வந்துட்டேன். படிப்பு ஒரு நிழல் மாதிரி சார். எப்பவும் கூடவே இருக்கும். என்னை நினைச்சுக்கிட்டா நிழல் இல்லாத மரம்தான் ஞாபகம் வருது. .."

படிப்பு, நிழல் போல என்பது உண்மைதான். ஆனால் நம்பிக்கை மரத்திற்கு வேர் போன்று முக்கியமானது...

என்றாவது வெற்றியடைவேன் என்று சொல்லாமல் சொல்லிய அவர் சிரிப்பிலிருந்து, எனக்குள்ளும் ஒரு புதிய மனிதன் பிறந்திருந்தான்...


வேரறுந்த மரங்கள்... - by கார்த்திகேயன் அரசரெத்தினம்



கப்பல் பறவை

சிவசங்கரியின் கப்பல் பறவை, சுட்ட மண் என்ற இரு தலைப்புகளும் அவற்றின் பொருள் காரணமாய் மனதில் பதிந்து விட்டன.


துறைமுகத்தில் நிற்கும் கப்பல் தளத்தில் சிதறிக் கிடக்கும் தானியங்களைத் தின்னப் போகும் பறவைகள், உணவின் மயக்கத்தில் கப்பல் நகருவதைக் கவனிக்கத் தவறிவிடுமாம். கப்பல் வெகுதூரம் சென்றபின் அவை நடுக்கடலில் இருப்பதை உணராது கரை நோக்கிப் பயணப்படுமாம். வெகு நேரம் பறந்தும் கரையைக் காண முடியாமல் கப்பல் நோக்கித் திரும்ப முயலுமாம். ஆனால் அதற்குள் கப்பல் எட்ட முடியாத தொலைவு சென்றுவிடுமாம். இதனால் கரைக்கும் போக முடியாமல், கப்பலுக்கும் திரும்பமுடியாமல் இளைப்பாறவும் இடமில்லாமல் பறந்து பறந்தே கடலில் விழுந்து செத்துப் போகுமாம். ஒரு சின்னத் தலைப்பில் எவ்வளவு அருமையான வாழ்க்கைத் தத்துவம்!


தலைப்பு - by நிலா
Post a Comment